சூப்பர் குட் நியூஸ்..! பதவி உயர்வுக்கு இனி TET தேர்வு அவசியமில்லை… தமிழக அரசு அரசாணை..!

By Soundarya on ஆனி 7, 2026

Spread the love

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 18 விழுக்காடு இடங்கள், தொடக்கக் கல்வித்துறையில் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் எனத் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுகளுக்கு இனி ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் (MHM), தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் (PSHM) மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆகிய பதவி உயர்வுகளுக்கு TET தேர்வு கட்டாயம் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசுப் பள்ளி ஆசிரியர்களிடையே கலவையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.