கணவன் தூங்கும் போது கள்ளக்காதலனுடன் வந்த மனைவி… நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்… 4-வது கல்யாணத்திற்காக போட்ட பயங்கர பிளான்…!

By SATHISH R on ஆடி 4, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கணவர் உயிரிழந்துவிட்டார். அதன்பின்னர், கடந்த 2006-ஆம் ஆண்டு துளசிராம் என்பவரை சரோஜ் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்த சூழலில், சரோஜிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேந்திர மெஹ்ரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்கள் இருவருக்குமிடையே திருமணத்திற்கு மீறிய கள்ள உறவாக மாறியுள்ளது.

கள்ளக்காதலன் மகேந்திரனை நான்காவதாக திருமணம் செய்து கொள்ள சரோஜ் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு தனது மூன்றாவது கணவரான துளசிராம் இடையூறாக இருப்பார் என கருதிய சரோஜ், அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். அதன்படி, கடந்த ஜூன் 28-ஆம் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த துளசிராமை, தனது கள்ளக்காதலன் மகேந்திர மெஹ்ரா மற்றும் அவரது நண்பர் விஷ்ணு ஆகியோருடன் இணைந்து சரோஜ் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதவாறு உடலை ரகசியமாக புதைத்துவிட்டு, துளசிராம் திடீரென மாயமானது போல நாடகமாடியுள்ளனர்.

   

கணவர் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்தும் சரோஜ் போலீசில் புகார் அளிக்காமலும், அவரை தேடாமலும் இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் மீனா உத்தரவின் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் செல்போன் அழைப்பு விவரங்களின் அடிப்படையில், சரோஜ் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்து, சரோஜ், மகேந்திரா மற்றும் விஷ்ணு ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

   

கைது செய்யப்பட்ட சரோஜ், “இந்த கொலையில் எனக்கு தொடர்பில்லை, மகேந்திரன்தான் என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டு எல்லாவற்றையும் செய்தார்” என போலீசாரிடம் கூறி தப்பிக்க முயன்றார். இருப்பினும், போலீசார் சேகரித்த வலுவான ஆதாரங்கள் சரோஜின் வாக்குமூலத்திற்கு முரணாக இருப்பதால், போலீசார் இந்த கொலையின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.