#image_title
தொகுப்பாளராக திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். அமரன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த மாதம் 18ஆம் தேதி சென்னையில் இருக்கும் பிரபல தனியார் கல்லூரியில் அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அமரன் திரைப்படத்தின் டீசரும் ஒரு பாடலும் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அமரன் திரைப்படம் பெரும் திருப்புமுறையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் ரிலீஸ் ஆக உள்ளதால் படக் குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்போது வந்த தகவலின் படி உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ளாராம். இதனால் பட குழுவினரும் பிரமோஷன் பணிக்காக அமெரிக்கா சென்று உள்ளனர். இதுவரை ப்ரமோஷன் பணிக்காக எந்த ஒரு தமிழ் படமும் அமெரிக்கா சென்றதில்லை. ஆனால் அமரன் பட குழுவினர் முதல் முறையாக பிரமோஷன் பணிக்காக அமெரிக்கா சென்றிருப்பதாக வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, காவல்துறையினர் வெறும்…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…
சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…
தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…