“ஐயோ ரொம்ப வியர்க்குது” காதில் இயர்போன் மாட்டிக்கொண்டு கடலை… மாணவனை காத்து வீச சொன்ன அரசுப் பள்ளி ஆசிரியை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அரங்கேறியுள்ள இந்த அவலச் சம்பவம், கல்வித் துறைக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு ஆசிரியை தனது காதுகளில் இயர்போன்களை மாட்டிக்கொண்டு யாரிடமோ மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அதே சமயம், அவரது அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவன், கை விசிறியைக் கொண்டு அந்த ஆசிரியைக்கு விசிறி விட்டுக்கொண்டிருக்கிறான். மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய நேரத்தில், ஒரு குழந்தையைத் தனது தனிப்பட்ட வேலைக்கு அடிமை போலப் பயன்படுத்திய ஆசிரியையின் செயல் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வித் தரம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்துப் பேசப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளில் இத்தகைய பொறுப்பற்ற போக்குத் தொடர்வது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. “இது கல்வி முறையின் பெயரால் நடத்தப்படும் கேலிக்கூத்து இல்லையென்றால் வேறு என்ன?” எனப் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.