பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டத்தில், பெண் சக ஊழியரின் தொந்தரவு மற்றும் காதல் விவகாரத்தால் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆசிரியர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வந்த நிலையில், அதே பள்ளியில் பணியாற்றும் ஒரு பெண் ஆசிரியையுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் ஆசிரியை, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த ஆசிரியரைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் பொய்ப் புகார்கள் அளிப்பதாக மிரட்டியதாகவும் தெரிகிறது.
இந்தத் தொடர் மிரட்டல்களாலும், மன உழைச்சலாலும் விரக்தியடைந்த அந்த ஆசிரியர், தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியைதான் தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்தப் பெண்ணின் தொல்லை தாங்காமலேயே அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் குடும்பத்தினர் கதறுகின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தற்கொலைக்குத் தூண்டிய காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…
தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…