ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடுத்துள்ள தாக்குதல் 5-வது வாரமாக நீடித்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹார்மோஸ் நீரிணையைத் திறக்க அல்லது அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள அதிபர் டிரம்ப் விதித்த 10 நாட்கள் கெடு முடிய இன்னும் 48 மணி நேரமே உள்ளது. இந்த நிலையில், “இன்னும் 48 மணி நேரத்தில் ஈரான் மீது நரகம் கவிழும்” என்று டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், தங்கள் நாட்டின் கட்டமைப்புகள் மீது கைவைத்தால் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. “உங்களுக்கு நரகத்தின் கதவுகள் திறக்கப்படும்” என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ள நிலையில், எதற்கும் பணியாமல் தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாக, இரு தரப்பிலும் எப்போது வேண்டுமானாலும் ஒரு பேரழிவு ஏற்படக்கூடும் என்ற சூழல் நிலவுகிறது.
இந்த மோதலுக்காக அமெரிக்கா தனது ஆயுதக் கிடங்கில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு ‘JASSM-ER’ ரக ஏவுகணைகளை ஈரான் மீது பயன்படுத்த ஒதுக்கியுள்ளது. சுமார் 600 மைல் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட இந்த அதிநவீன ஏவுகணைகளை, பசிபிக் பிராந்தியக் கிடங்குகளில் இருந்து கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஏவுகணை கையிருப்பு கணிசமாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனா போன்ற பலமான எதிரிகளுடனான எதிர்கால மோதல்களுக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்த ஏவுகணைகளை, தற்போது ஈரான் மீது பயன்படுத்துவது அமெரிக்காவின் நீண்டகாலப் பாதுகாப்புத் திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், சமீபத்தில் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானிகளை மீட்டது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் தங்கள் வீரர்களின் உயிரைப் பாதுகாக்க, இந்த நீண்ட தூர ஏவுகணைகளே சிறந்த வழி என்று அமெரிக்கா கருதுகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…