இனி பிறப்பு, இறப்பு சான்றிதழ் உங்கள் கையில்… பிறப்பு, இறப்பு சான்றிதழ் உங்கள் கையில்… தமிழக அரசின் மாஸ் டிஜிட்டல் புரட்சி..!!

By Muthu Mani on ஆனி 17, 2026

Spread the love

பொதுமக்களுக்கு அரசு சேவைகளை எளிதாக வழங்கும் நோக்கில், வாட்ஸ்அப் மூலம் பிறப்பு, இறப்பு மற்றும் வருவாய் துறை சான்றிதழ்களைப் பெறும் புதிய வசதியைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகமாக இருப்பதை உணர்ந்து, சேவைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாக 50 அரசு சேவைகள் இதன் மூலம் வழங்கப்பட உள்ளன. இதற்காகச் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் முன்னிலையில் தமிழக அரசு மற்றும் வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகள் இடையே அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்குமுன்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நேரில் செல்ல வேண்டியிருந்த நடைமுறை மாற்றப்பட்டு, தற்போது வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கும் எளிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து சில நாட்களுக்குள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், ரேஷன் அட்டை திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கூடுதல் சேவைகளும் விரைவில் இந்த வாட்ஸ்அப் வசதியில் இணைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.