“காலியாக இருக்கும் தமிழக கஜானா?…” கடன் சுமைக்கு முற்றுப்புள்ளி… விஜய்யின் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?… வருவாயை பெருக்க ஸ்பெஷல் டீம்… தவெக அரசு அதிரடி நடவடிக்கை…!

By Visaka on ஆடி 28, 2026

Spread the love

தமிழ்நாட்டின் கடன் சுமையைக் குறைக்கவும், வருவாயைப் பெருக்கவும் பிரபல பொருளாதார வல்லுநர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஆறு பேர் கொண்ட உயர்மட்ட வருவாய் பெருக்கக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், எதிர்கால நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும். இக்குழுவில் முனைவர் கே.பி. கிருஷ்ணன், அர்பிந்த் மோடி, நஜீப்ஷா (ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்), எம்.ஏ. சித்திக் (ஐ.ஏ.எஸ்) மற்றும் முனைவர் சுரேஷ்பாபு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு கஜானாவில் ஏற்படும் வீண் செலவுகளைக் குறைப்பது, வருவாயை அதிகரிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிவது மற்றும் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் வருமானத்தை மேலும் பெருக்குவது குறித்து இந்தக் குழு தீவிரமாக ஆய்வு செய்யும். எந்தவொரு துறையிலிருந்தும் தேவையான தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் தடையின்றிப் பெறும் முழு அதிகாரமும் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

   

பொருளாதார நிபுணத்துவம் பெற்ற இக்குழுவின் ஆலோசனைகள் மற்றும் ஆய்வறிக்கை, தமிழக அரசின் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்களை மேம்படுத்துவதற்கும், மக்கள் நலத்திட்டங்களை எவ்விதத் தடையுமின்றி தொடர்வதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் வரவிருக்கும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.