அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிவரும் பேறுகால தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ₹1,500 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனை ₹7,367 ஆக உயர்த்தி, அதற்கான ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். 2026 தேர்தல் வரவுள்ள நிலையில், சம்பளம், உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றில் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
