மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த விஜய் ஆண்டனியின் பேச்சு.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க சொன்ன கிறிஸ்துவ மகாசபை..

By Ranjith Kumar

Updated on:

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி காலில் செருப்பு போடாமல்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ  வெளியாகி  வருகிறது. இவர் நடிகர் இசையமைப்பாளர் ,பாடலாசிரியர், தயாரிப்பாளர் , ஒலி  பொறியாளர் போன்ற பன்முகத்திறமை கொண்டவர். இவர் இசையமைத்து பாடிய நக்க முக்கா  பாடலுக்காக  கடந்த 2009 ஆம் ஆண்டு கோன்ஸ் கோல்டன் லயன்  விருதை பெற்றதுடன், அந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற  பெருமையை பெற்றவர். மேலும் இந்த பாடல் 2011 ஆம் ஆண்டு நடந்த கிரிகெட்  உலக கோப்பையில் ஒலிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நான் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.பின்னர் அவர் பல படங்களில்  நடித்து வருகிறார் . இவரது படங்கள் மற்ற படங்களை காட்டிலும் தனித்துவம் வாய்ந்த கதைகளத்தை கொண்ட படங்களாக இருக்கின்றன.கடந்த ஆண்டு அவர் நடித்த பிச்சைகாரன் 2  வெளியாகி நல்ல வெற்றியைப்பெற்றது. இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஹிட்லர். இப்படத்தை  இயக்குனர் தனா இயக்கியுள்ளார்.

   


அதனை அடுத்து எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி போன்ற படங்களில்  நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக உள்ள “ரோமியோ” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத் தாண்டி விஜய் ஆண்டனி அவர்கள் பொதுவெளியில் மக்களுக்கும், தன் ரசிகர்களுக்கும் நல்ல விஷயங்களை பேசி வருகிறார். வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை தத்துவமாக பேசுவதை இவர் தனித்துவமான விஷயம். இதனால் இவருக்கு பல ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது அதே போல் தான் கருத்தாக பேச நினைத்து இயேசுவை பற்றி பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.

கிறிஸ்துவ தெய்வமான இயேசு திராட்சை பழச்சாறான மது குடித்தார் என்று பேசியிருந்தார், அதற்கான சான்று ஏதேனும் உள்ளதா? இல்லாமல் எப்படி இவர் பொதுவெளியில் பேசுவார் என்று சர்ச்சை கிளம்பி உள்ளதே. தற்போது இதை கண்டித்து கிறிஸ்துவ மகா சபை கண்டனம் தெரிவித்துள்ளார்கள். எப்படி நீங்கள் இயேசுவைப் பற்றி அவதூறாக பேசுவீர்கள் என்று தமிழக கிறிஸ்துவ இயக்கம் விஜய் ஆண்டனி அவர்கள பொதுவெளியில் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதற்கான எந்த பதிலும் இன்னும் விஜய் ஆண்டனி அவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கவில்லை.

author avatar
Ranjith Kumar