“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

By Devi Ramu on புரட்டாதி 14, 2026

Spread the love

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள் மற்றும் விஐபிக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பிரத்யேக 3D அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

சாதாரண காகித அழைப்பிதழ்களுக்கு மாற்றாக, இது ஒரு பெட்டி வடிவ அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியைத் திறந்ததும், லால்பாக் சா ராஜா கம்பீரமாக வீற்றிருப்பது போன்ற தத்ரூபமான முப்பரிமாண 3D வடிவம் வெளிப்படுகிறது. அதன் பின்புறம் விழாவின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் விவரங்கள் அச்சிடப்பட்டு, ஒரு நினைவுப் பரிசைப் போலப் பாதுகாக்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

   

https://www.instagram.com/reel/DdJmOtNI2Ej/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

   

தனது 93-வது ஆண்டைக் கொண்டாடும் லால்பாக் சா ராஜா பந்தலின் நுழைவாயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பிரம்மாண்ட கோபுர முகப்புத் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகர் வீற்றிருக்கும் தர்பார் பகுதி வெள்ளிப் பின்னணியில் மிக அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு, செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 25 வரை பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.