நாடே அதிர்ச்சி..! பள்ளி வளாகத்தில் தூக்கில் தொங்கிய மாணவன்… ஆசிரியர்கள் கொடுத்த டார்ச்சரே காரணம்… தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 6 பேர் மீது FIR..!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

கேரள மாநிலம் வடகேராவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 15 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை அன்று வடகேரா அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் 15 வயது சிறுவன் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான். செவ்வாயன்று பள்ளியில் வைத்து ஆசிரியர்கள் அந்தச் சிறுவனைத் துன்புறுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவன் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் மாணவனின் தந்தை மல்லப்பா பீமரையா பூஜாரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியர் அய்யப்பா, ஆசிரியர்கள் ஷரணப்பா, சௌமியா, மல்லப்பா மற்றும் விருந்தினர் ஆசிரியர்கள் யல்லப்பா, மஞ்சுளா ஆகிய ஆறு பேர் மீது வடகேரா போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர். தனது மகனின் இறப்பிற்கு காரணமான ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.