அப்போ காக்கா.. இப்போ கழுதை.. வேட்டையன் ஆடியோ லான்ச்சில் ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரி.. அட இதுவும் நல்லா இருக்கேப்பா..!!

By Priya Ram on செப்டம்பர் 21, 2024

Spread the love

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் பத்தாம் தேதி வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. நேற்று சென்னையில் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் ஒரு குட்டி ஸ்டோரி கூறியுள்ளார். அவர் கூறியதாவது வேட்டையன் பட சூட்டிங் தொடங்க இரண்டு நாட்கள் இருந்தபோது ஞானவேல் என்னிடம் வந்து உங்களிடம் பேச வேண்டும் என சொன்னார்.

   

அது பற்றி கேட்டதற்கு நீங்கள் நடித்த தளபதி படத்தை 17 முறை பார்த்திருக்கிறேன். புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுவது வரை படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா? அந்த மாதிரி ஒரு படம் எடுக்கணும் என சொன்னார். உடனே நான் அவரிடம் ஒரு கதை சொன்னேன். உத்தரகாசியில டோபி ஒருத்தர் இருந்தாரு. அவர் துணியை துவைக்க வேண்டும் என்றால் கீழே ஓடும் ஆற்றுக்கு தான் வரவேண்டும். அவரிடம் இருக்கும் கழுதையில் துணி மூட்டையை வைத்துக்கொண்டு கீழே வந்து துணி துவைப்பார். அப்படி ஒரு நாள் வந்து துணியை துவைத்து பார்க்கும் போது கழுதை காணவில்லை.

   

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினியின் 'வேட்டையன்' படக்குழு | rajini  starrer vettaiyan movie first single announced - hindutamil.in

 

அந்த கழுதை தான் அவருக்கு உயிர், மூச்சு எல்லாமே. அதனால விரக்தியில் ஒரு மாதிரி ஆகி எதை கேட்டாலும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு. மனைவி, குழந்தைகள் எல்லாரும் விட்டுப் போக ஆரம்பிச்சிட்டாங்க. அவர் ஒரு மரத்தடியில் தனியா உக்காந்திருந்தார். அந்த டோபியை பார்த்த எல்லாரும் சாமியார்னு நினைச்சு அவரிடம் பலன்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு சிஷ்யர்களும் வந்தாங்க. ஒரு கட்டத்தில் டோபிக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பவும் வர ஆரம்பிச்சுட்டு. அப்போ ஒரு கழுதை கத்தியது. உடனே என் கழுதை எங்கே என்று டோபி கேட்டாரு. அந்த சிஷ்யர்கள் நீங்க ஒரு சாமியார். நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்கன்னு சொன்னாங்க உடனே அவரு யோவ் நான் டோபியா.

Vettaiyan teaser out | வேட்டையன் படத்தின் டீசர் வெளியீடு

என் கழுதையை காணவில்லை என்று தான் இப்படி ஆயிட்டேன் வெளியே சொன்னா கதை கந்தல் ஆகிடும் சொல்லாதீங்கன்னு டோபி சொல்லிட்டாருன்னு ஞானவேல் கிட்ட சொன்னேன். அதைக் கேட்டு இத ஏன் என்கிட்ட சொல்றீங்கன்னு ஞானவேல் சொன்னாரு. சார் அந்த டோபியே நான் தான். தளபதி ஓகே ஆன காட்சி மட்டும் தான் நீங்க பார்த்தீங்க. அதுக்கு பின்னாடி எத்தனை டேக் போச்சுன்னு எனக்கு தான் தெரியும். முள்ளும் மலரும் படத்துல மகேந்திரனும் பாலு மகேந்திராவும் சேர்ந்து தான் அப்படி என்ன பண்ண வச்சாங்க. புவனா ஒரு கேள்விக்குறி படத்துல 11 பக்கம் டயலாக் ஒரு நாளைக்கு கொடுத்தாங்க. நான் மிரண்டுட்டேன்.

கங்குவாவுடன் போட்டி போடும் வேட்டையன் | nakkheeran

முத்துராமன் என்னை கூப்பிட்டு உன்னால பேச முடிந்த அளவுக்கு பேசு அப்படின்னு சொல்லிட்டாரு. ஆறிலிருந்து அறுபது வரை படத்துல பாதியிலேயே நான் வெளியேறிட்டேன். எல்லாரும் சேர்ந்து பேசி என்னை நடிக்க வைத்தார்கள். அந்த படம் ஓடாது என்று நினைத்தால் ஆனா சூப்பர் ஹிட் ஆச்சு. முரட்டுக்காளை, போக்கிரி ராஜா படத்தால கொஞ்சம் பிழைத்துக்கொண்டேன். ஆறிலிருந்து அறுபது வரை புவனா ஒரு கேள்விக்குறி அந்த மாதிரி படத்துல நடிக்கணும்னு எதிர்பாக்காதீங்க. வழக்கமா எப்படி நடிக்கிறேனோ அப்படியே நடிக்கிறேன். பழையபடி நடிச்சா கதை கந்தலா ஆகிடும்னு சொன்னேன் என ரஜினி கூறியுள்ளார்.