கைதாகுவதற்கு 2 மாதங்களுக்கு முன் அம்பானியை சந்தித்த எப்ஸ்டீன்… டிரம்ப் ஆட்சியில் நடந்த திரைமறைவு பேரங்கள் என்ன?… வெளியான பகீர் தகவல்கள்..!!!

By Rajeshwari on சித்திரை 6, 2026

Spread the love

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் போது, வெள்ளை மாளிகையில் தனது செல்வாக்கை அதிகரிக்க தொழிலதிபர் அனில் அம்பானி, பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனின் உதவியை நாடியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ மற்றும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அனில் அம்பானி எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறிப்பாக, இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக விவகாரங்களில் வெள்ளை மாளிகையின் ரகசியத் தகவல்களைப் பெற ‘சிக்னல்’ மற்றும் ‘டெலிகிராம்’ போன்ற செயலிகள் மூலம் இருவரும் உரையாடியுள்ளனர். அனில் அம்பானி என்ற புனைப்பெயரில் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாகவும், முக்கியமான அரசியல் நியமனங்கள் குறித்து முன்கூட்டியே தகவல்களைப் பெற்றதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

   

மேலும், 2019-ம் ஆண்டு அனில் அம்பானியின் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்த சமயத்தில், எப்ஸ்டீன் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி ஆறுதல் அளித்துள்ளார். மே 23, 2019 அன்று மான்ஹாட்டனில் உள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் அனில் அம்பானி அவரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்; இந்தச் சந்திப்பு நடந்த இரண்டு மாதங்களிலேயே சிறுமிகள் கடத்தல் வழக்கில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

மேலும் புளூம்பெர்க் அறிக்கையின்படி, பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக அமெரிக்க உயர் அதிகாரிகளைச் சந்திக்க எப்ஸ்டீனின் உதவியை அனில் அம்பானி கோரியதும், ஒருமுறை சந்திப்பின் போது பெண் ஒருவரை ஏற்பாடு செய்வது குறித்து அவர்கள் உரையாடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க அனில் அம்பானி தரப்பு இதுவரை முன்வரவில்லை.