2021 இல் 4 கடை ஆரம்பித்து 4 வருடங்களில் 4 கோடி வருவாய் ஈட்டிய “The Rameshwaram Cafe” இன் Success Secret தெரியுமா…?

By admin on ஆவணி 10, 2024

Spread the love

கடந்த சில வருடங்களாக நீங்கள் பெங்களூர் சென்று இருந்தால் தி ராமேஸ்வரம் கபே பற்றி நீங்கள் நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். மணமணக்கும் நெய் தோசை, பொடி இட்லி என தெனிந்திய சைவ உணவுகளை உயர்தரத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் உணவகம் தான் தி ராமேஸ்வரம் கபே. 2021 ஆம் ஆண்டு நான்கு கடைகளில் இருந்து ஆரம்பித்து நான்கு வருடங்களில் நான்கு கோடி ரூபாய் டேரன் ஓவர் செய்து கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் சக்சஸ் சீக்ரெட் என்ன என்பதை விரிவாக காண்போம்.

தி ராமேஸ்வரம் கபே CA திவ்யா ராகவேந்திரா ராவ் மற்றும் ராகவேந்திரா ராவ் ஆகியோரால் நிறுவப்பட்டது. ஐ ஐ எம் அகமதாபாத்தில் படித்த திவ்யா படிக்கும் காலத்திலிருந்து பாரம்பரிய தெனிந்திய உணவு வகைகளை சீரான தரம் மற்றும் சேவையுடன் கொடுக்க வேண்டும் என்று எண்ணி உள்ளார். KFC மற்றும் McDonalds போன்ற உலகளாவிய சங்கிலி உணவகங்களை போல நம் தென்னிந்திய உணவுகளை சங்கிலியாக பாரம்பரியமான உணவகங்களை நிறுவ வேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்தது.

   

சேஷாத்திரிபுரத்தில் தனது கணவரான ராகவேந்திர ராவ் ஒரு எளிய உணவு கடையை வைத்து நடத்தி வந்துள்ளார். உணவுத்துறையில் 15 வருடத்திற்கும் மேல் அனுபவமுள்ள ராகவேந்திரா ராவை திவ்யா சந்தித்தபோது இந்த உணவகம் பற்றிய கனவு மேலும் வலுவடைந்தது. திவ்யா டாக்டர் APJ அப்துல் கலாம் மீது அதீத மரியாதை கொண்டிருந்தபடியால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரின் பிறந்த இடமான இராமேஸ்வரம் என்ற பெயரை தேர்ந்தெடுத்து அவர்களின் உணவகத்திற்கு தி ராமேஸ்வரம் கபே என்று பெயரிட்டனர். மேலும் அப்துல் கலாம் அவர்களை தங்களது இன்ஸ்பிரேஷன் ஆகவும் எடுத்துக் கொண்டு பணியாற்ற தொடங்கினர் திவ்யா மற்றும் ராகவேந்திர ராவ் தம்பதியினர்.

   

தி ராமேஸ்வரம் கபே உணவகத்தில் வெற்றிக்கு காரணமாக கருதப்படுவது சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகும். சுத்தமான சைவ தென்னிந்திய உணவு வகைகளை உயர்தர பொருட்களை வைத்து தயார் செய்து சுவையுடன் வழங்குவதாலே இந்த உணவகம் பிரபலமானது.

 

இந்த கஃபேவில் நாங்கள் உணவில் தரம் மற்றும் பொருட்களின் தேர்வு ஆகியவற்றில் கடுமையாக கட்டுப்பாடுகளை கொண்டுள்ளோம். உதாரணமாக உணவுகளில் பேக்கிங் பவுடரை பயன்படுத்துவதில்லை. சுத்தமான நெய்யை மட்டுமே பயன்படுத்துகிறோம். வாடிக்கையாளர்களை கனிவோடு கவனிக்க ஊழியர்களை பார்த்து தேர்ந்தெடுத்துள்ளோம். எந்த ஒரு உணவு செய்முறையிலும் செயற்கை வண்ணம் மற்றும் சுவையூட்டல் இல்லாமல் செய்து வழங்குகிறோம். இதில் மேலும் சிறப்பானது என்னவென்றால் நாங்கள் குளிர்சாத பெட்டிகளை பயன்படுத்தவில்லை அன்றன்றைக்கு புதிதாக பொருட்களை வாங்கி அன்றைக்கே செய்து முடித்து விடுவோம். இதுவே எங்கள் தி ராமேஸ்வரம் கபேவின் சக்சஸ் சீக்ரட்டாக உள்ளது என்று நிறுவனத்தின் CEO திவ்யா கூறுகிறார்.

மேலும் நாங்கள் பலமுறை புதிய மாவு அரைத்து புதிய சட்னிகள் செய்து வழங்குகிறோம். அதனால் நீங்கள் அதிகாலையில் சென்றாலும் இரவில் தாமதமாக சென்றாலும் உங்கள் உணவு எப்போதும் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். .எந்த ஒரு கடையிலும் நாங்கள் திறப்பதற்கு முன் உணவு எப்படி தயாரிக்கப்பட வேண்டும் மற்றும் கபே மற்றும் கூட்டத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்வதற்கு ஊழியர்களுக்கு கடுமையான பயிற்சி அளித்து வருகிறோம். தற்போது எங்களது கடையில் 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 10 முக்கிய குழு உறுப்பினர்களுடன் பணியாற்றி வருகிறோம்.

நள்ளிரவில் சூடான தோசைகள் மற்றும் இட்லிகளை உண்பது ஒரு சிறப்பான அனுபவம்தான். பெங்களூர் வாசிகள் அதனை பெரும்பாலும் விரும்புவர். நமது தி ராமேஸ்வரம் கபே மெனு அவர்களை கவர்கிறது. அதனால் தான் நம்முடைய கஃபே அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும். எப்போது சென்றாலும் தென்னிந்திய உணவு வகைகளை பிரஷ்ஷாக தரமாக சுகாதாரமாக நீங்கள் ருசித்து மகிழலாம். மேலும் இந்த உணவகத்தை 24/7 திறந்து வைக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதற்கு ஒப்புதல் கிடைத்தால் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்.

தற்போது நான்கு கிளைகளை பெங்களூரில் கொண்டுள்ள தி ராமேஸ்வரம் கபே அடுத்ததாக சர்வதேச அளவில் விரிவடைந்து துபாயில் முதல் விற்பனை நிலையத்தை தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக திவ்யா குறிப்பிட்டார். அடுத்த ஐந்தாண்டுகளில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் தி ராமேஸ்வரம் கபே திறப்பதே எங்களது லட்சியம், கனவு, நோக்கம் என்று அந்நிறுவனத்தின் தலைவர் திவ்யா பகிர்ந்துள்ளார்.