“எங்க பக்கமிருந்தும் ஆள் எழுந்து நிற்போம்”…. பேரவையில் கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா… நடுநடுங்கிப்போன அவை… ஓங்கி அடித்து எச்சரித்த சபாநாயகர்…..!

By Nanthini on புரட்டாதி 8, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 8) மிசா சட்டம் தொடர்பான முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு உரையாற்றிக் கொண்டிருந்தபோது பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவரது உரையின் போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக உறுப்பினர்களுக்கு எதிராகக் காரசாரமாகப் பேசியதோடு, “எங்கள் பக்கமிருந்தும் அனைவரும் எழுந்து நிற்போம்” என்று வெளிப்படையாகக் கூறினார். அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதை அடுத்து, உடனடியாக தலையிட்ட சபாநாயகர், சட்டமன்ற மரபுகளைச் சுட்டிக்காட்டி அவ்வாறு பேசுவது அவையின் கண்ணியத்திற்கு எதிரானது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாகக் கண்டித்து எச்சரித்தார்.