தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு சமீபகாலமாக ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் தோல்வியை சந்திக்கிறது. இந்த நிலையில் பிரதர்ஸ் படத்தில் ஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அடுத்ததாக ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களிலும் ஜெயம் ரவி நடித்துள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்தின் ஷூட்டிங் தள்ளிக் கொண்டே போகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஜெயம் ரவி நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அந்த வகையில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் ஜெயம் ரவிக்கு நல்ல வரவேற்பு தேடித்தந்தது. அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி என்ற பெயரில் தெலுங்கு படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தின் ரீமேக் தான் தமிழில் உருவான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இந்த படத்தை மோகன் ராஜா இயக்கினார். ஜெயம் ரவி, அசின் இணைந்து நடித்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. அதில் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ என்ற பாடலை யுவபாரதி எழுதினார்.
முதலில் யுகபாரதி கண்டேன் கண்டேன் என ஆரம்பிக்கும் பாடலை தான் எழுதியுள்ளார். உடனே மோகன் ராஜா இப்படி வேண்டாம் வேறு மாதிரி எழுதி தாருங்கள் என கூறியுள்ளார். அவர் விருப்பப்படி உருவானது தான் ஐயோ ஐயோ பாடல். அன்றைய நாள் மாலை நேரத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் யுகபாரதியை தொடர்பு கொண்டு ஏதாவது பாடல் இருக்கிறதா என கேட்டார்.
உடனே யுக பாரதி மோகன் ராஜா ரிஜெக்ட் செய்த பாடலை இசை அமைப்பாளர் வித்யாசாகரிடம் கொடுத்துள்ளார். அவர் அந்த வரிகளை வைத்து ஒரு பாடலை உருவாக்கி விஜய் நடித்த மதுர படத்தில் உருவாக்கினார் வித்யாசாகர். அந்த பாடல் தான் கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் என்ற பாடல். ஜெயம் ரவி படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட அந்த பாடல் விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்தது.