கன்னியாகுமரி மாவட்டம் அருமலை அடுத்த இடைக்கோடு முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் 70 வயது சிகாமணி. கூலி தொழிலாளியான இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். அதில் மூன்று மகன்களுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி அதே பகுதியில் வசித்து வந்துள்ளார்கள். கடைசி பையன் சுனில் குமாருக்கு மட்டும் திருமணமாகவில்லை. இதற்கிடையில் கடந்த ஐந்து வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிகாமணியின் இடது கால் அகற்றப்பட்டது .இதனால் நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதனால் மகன்கள் சேர்ந்து வீட்டின் பக்கத்தில் ஒரு சிறிய ரூம் கட்டி அதில் தங்க வைத்து கவனித்து வந்துள்ளார்கள்.
திருமணமாகாத கடைசி பையன் சுனில் குமார் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்ததால் அடிக்கடி தந்தையுடன் சொத்து தகராறு குறித்து சண்டையிட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுனில் குமாருக்கும், தந்தை சிகாமணிக்கு இடையே பெரும் தகராறு வெடித்ததில் படுத்த படுக்கையாக கிடக்கிறார் என்றும் யோசிக்காமல் தந்தையை தகாத வார்த்தையால் திட்டி அருகில் பெயிண்டில் கலக்க வைத்திருந்த தின்னரை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துள்ளார். படுத்த படுக்கையாக இருந்த சிகாமணிக்கு எழுந்திருக்க கூட முடியாததால் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சுனில் குமாரை கைது செய்துள்ளார்கள்.
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…