நெஞ்சை உருக்கும் காட்சி: “அம்மா வேண்டாம்மா” கார் முன் பாய்ந்து தற்கொலை செய்ய சென்ற தாய்… போராடி காப்பாற்றிய மகன்..!

By Soundarya on ஆனி 13, 2026

Spread the love

தனது வீடு இடிக்கப்பட்ட சோகத்தில், ஓடும் காரின் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாயை, சிறுவன் ஒருவன் சாதுரியமாகச் செயல்பட்டு காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களது வாழ்வாதாரமாக இருந்த வீடு இடிக்கப்பட்டதால் மனமுடைந்த அந்தத் தாய், விரக்தியின் எல்லைக்கே சென்று இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளார்.

https://twitter.com/DikenaClinton/status/2065448812823425323/video/1

   

தாய் காரின் முன்னே பாய்வதைக் கண்ட அந்தச் சிறுவன், நொடிப் பொழுதும் தாமதிக்காமல் ஓடிச் சென்று, தனது தாயைக் கட்டிப்பிடித்துப் பின்னோக்கி இழுத்துக் காப்பாற்றியுள்ளான். தாயின் உயிரைக் காப்பாற்றி உண்மையான ஹீரோவாகத் திகழும் இந்தச் சிறுவனின் வீரத்தையும், சமயோசித புத்தியையும் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.