அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா… என்னையவே எதிர்த்து பேசுறியா?… பெற்ற தாயின் தொண்டையை அறுத்துக் கொன்ற கல்லூரி மாணவன்… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூர சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 24, 2026

Spread the love

காசிபேட்டை பாலாஜிநகரில் வசித்து வந்தவர் உதயஸ்ரீ. இவரது மகன் துரைபாபு, கல்லூரியில் பட்டம் படித்து வருகிறார். துரைபாபுவின் தொடர்ச்சியான தவறான நடத்தைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், தனது தாயாருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த துரைபாபு, கத்தியால் தாயின் தொண்டையை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலையாளி துரைபாபுவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.