பரேலியின் சுபாஷ் நகர் பகுதியில் உள்ள கார்கேனா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான அஜய் என்பவருக்கும், ஷேகுபூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அஜய்யின் மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது.
தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அஜய் பதுவான் மாவட்டத்தில் உள்ள ஷேகுபூருக்குச் சென்றுள்ளார். அப்போது, அஜய்யின் மாமனார் வீட்டார் அவரை கடுமையாகத் திட்டி, அநாகரீகமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அஜய், வீடு திரும்பியதும் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் விஷம் அருந்தியுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைக் கண்ட குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அஜய்யின் தாய் கூறுகையில், தனது மருமகள் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகப் பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார். மேலும், மாமனார் வீட்டாரின் மிரட்டலே தனது மகன் இத்தகைய முடிவை எடுக்கக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அஜய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…