ஜார்க்கண்ட் மாநிலத்தின் டட்டிசில்வாய் இரயில் நிலையத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவரால் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவத்தினருக்கான சிறப்புப் பெட்டியில், 22 வயது மதிக்கத்தக்க பெண்ணை 42 வயதான அந்த வீரர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார். இரயிலுக்காக காத்திருந்த அந்தப் பெண்ணை, குடிபோதையில் இருந்த அந்த ராணுவ வீரர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலைக் கேட்டு விரைந்து வந்த இரயில்வே காவல்துறையினர், அங்கிருந்து தப்பியோட முயன்ற குற்றவாளியைக் கையும் களவுமாகப் பிடித்தனர். அந்தப் பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ராணுவ வீரர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஒரு வீரரே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…
ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…
ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில், கதூ ஷியாம் கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த வாகனம் பயங்கர…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் கொடூர சம்பவமாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த…