புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை…! ஆரோக்கியத்தை இனி கழிப்பறையே சொல்லும்… வந்துவிட்டது நவீன “ஸ்மார்ட் டாய்லெட்”… மருத்துவ பரிசோதனைக்கு இனி லேப் தேவையில்லை…!!

By Soundarya on தை 6, 2026

Spread the love

உடல் நலத்தைக் கண்காணிக்க உதவும் நவீன ‘ஸ்மார்ட் டாய்லெட்’ (Smart Toilet) தொழில்நுட்பம், அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் CES 2026 சர்வதேச மின்னணு கண்காட்சியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஸ்மார்ட் கழிப்பறைகளில் பொருத்தப்பட்டுள்ள ஆப்டிகல் சென்சார்கள் மற்றும் ஏஐ (AI) தொழில்நுட்பம், பயனரின் சிறுநீர் மற்றும் மலத்தை தானாகவே ஆய்வு செய்கின்றன.

உடலில் உள்ள நீரேற்ற அளவு (Hydration), குளுக்கோஸ் அளவு மற்றும் குடல் ஆரோக்கியம் (Gut Health) போன்ற தகவல்களை இது உடனடியாக வழங்குகிறது. ஆய்வு முடிவுகள் பயனரின் ஸ்மார்ட்போனில் உள்ள செயலியில் அல்லது கழிப்பறை அருகே பொருத்தப்பட்ட திரையில் காட்டப்படும். இது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய உதவும் என்று கூறப்படுகிறது. தனியாக வசிக்கும் முதியவர்களுக்காக ‘Jindo the Dog’ போன்ற சிறப்பு ஏஐ அமைப்புகள் உள்ளன. முதியவர்கள் 12 மணி நேரத்திற்கும் மேலாக கழிப்பறையைப் பயன்படுத்தவில்லை என்றால், இது உறவினர்களுக்கு தானாகவே எச்சரிக்கை தகவலை அனுப்பும்.

   

Vivoo மற்றும் VOVO (NEO) போன்ற நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இதில் பழைய கழிப்பறைகளில் எளிதாகப் பொருத்தக்கூடிய ‘கிளிப்-ஆன்’ வகை சென்சார்களும் அடங்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழகத்தின் கோயம்புத்தூர் மாநகராட்சி, என்டூ டெக்னாலஜி (Enthu Technology) நிறுவனத்துடன் இணைந்து 25 பொதுக் கழிப்பறைகளில் ஏஐ அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.