முனி படத்தை தொடர்ந்து காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. அதன்பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் இப்போது காஞ்சனா 4 என்ற படத்தை இயக்கி அவரே நாயகனாக நடித்து வருகிறார். இதில் நடிகை பூஜா ஹெக்டே முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக பொள்ளாச்சி சென்னை ஐதராபாத் பாண்டிச்சேரி என பல இடங்களில் நடந்த நிலையில் புதிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
இதுவரை இடைவேளைக்கு முந்திய காட்சிகள் வரைதான் படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் 5 பாடல் காட்சிகள் மீதம் உள்ளது. 85 நாட்கள் ஷூட்டிங் இன்னும் பாக்கி உள்ளது என்கின்றனர். இத்தனை மாதங்களாகியும் இன்னும் 3 மாதங்கள் படப்பிடிப்பு உள்ளதா என ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். டெக்னிக்கலாக இந்த படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அதிக நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…