கணவர் இறந்த ஐந்தே நாட்களில் அவரது தம்பிக்கும் (கொழுந்தன்), மனைவிக்கும் இடையே நடந்த இந்த அதிர்ச்சிகரமான திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 49 வயதான கணவரை விட, அவரது மனைவிக்கு வெறும் 28 வயதே ஆகிறது. “எனது இளமையை நான் ஏன் வீணாக்க வேண்டும்? இளமை ஒருமுறைதான் வரும், மீண்டும் வராது” என்று அந்தப் பெண் மிகவும் துணிச்சலாகக் கூறியது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
தற்கொலை அல்லது இயற்கை மரணம் என்று கருதப்பட்ட நிலையில், அந்தப் பெண் ஒரு பகீர் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். தனது கணவரால் தமக்கு முறையான தாம்பத்திய சுகம் கிடைக்கவில்லை என்றும், அதனால் தான் அவரைத் திட்டமிட்டு கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், “எனக்கும் எனது கொழுந்தனுக்கும் இடையே யாராவது குறுக்கே வந்தால், எனது நகைகளை விற்றாவது அவர்களைக் கொலை செய்துவிடுவேன்” என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அந்தப் பெண்ணின் கொழுந்தனும் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். “எனது அண்ணிக்கு (Bhabhi ji) என் உயிரையும் கொடுப்பேன்” என்று அவர் கூறியுள்ளதோடு, அவர் மீது அதீத அக்கறை காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கணவரை இழந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அவரது தம்பியையே மணம் முடித்துக் கொண்டதோடு, கொலை செய்ததையும் அந்தப் பெண் ஒப்புக்கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
