காதலனுடனான கள்ளத்தொடர்புக்குத் தடையாக இருந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து, சமையலறையிலேயே பிணத்தைப் புதைத்துவிட்டு, அதன் மேலேயே சமையல் செய்து சாப்பிட்டு வந்த பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண் தனது காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு, சடலத்தை வீட்டின் சமையலறைத் தரையைத் தோண்டிப் புதைத்துள்ளார். அதன் பிறகு, எதுவும் தெரியாதது போலத் தனது இரண்டு குழந்தைகளுடன் அதே வீட்டில் வசித்து வந்த அவர், பிணம் புதைக்கப்பட்ட அதே சமையலறையில் தினமும் ரொட்டி சுட்டு, தன் குழந்தைகளுக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டு வந்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண் தன் குழந்தைகளைப் பாதியிலேயே தவிக்கவிட்டு, வீட்டை விட்டு வெளியேறித் தன் காதலனுடன் ஓடிப் போயுள்ளார். இதனால் அந்த இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், வீட்டை விட்டு ஓடும் முன் அந்தப் பெண் அறையில் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அதில், “எனக்கு என் குழந்தைகளை விட என் காதலன் தான் முக்கியம்; நாங்கள் இருவரும் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று நெஞ்சை உலுக்கும் வகையில் எழுதியுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சமூக வலைதளங்களில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாயானவள் காமப் பசிக்காகத் தன் கணவனைக் கொன்று, சடலத்தின் மீதே சமையல் செய்து சாப்பிட்டது மனிதநேயமற்ற உச்சக்கட்ட கொடூரம் என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை நடுத்தெருவில் தவிக்கவிட்டு, காதலனே முக்கியம் எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற அந்தப் பெண்ணின் செயல், “ஒரு தாய்க்குத் தன் குழந்தைகளை விடக் காதலன் தான் முக்கியமா???” என்ற மிகப்பெரிய கேள்வியையும் சமூக அவலத்தையும் உறைந்துபோகும் வகையில் எழுப்பியுள்ளது.
