மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது பூஜா ஜாதவ், 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கணவனின் வருமானம் குறைவாகவும் பூஜாவின் தேவைகள் அதிகமாகவும் இருந்ததால், இருவருக்கும் இடையே தகராறுகள் வெடித்தன. கணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீதிமன்றத்திற்குச் சென்று வந்துகொண்டிருந்தபோது, பல வழக்குகள் நிலுவையில் உள்ள கல்யாண் என்பவருடன் பூஜாவிற்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. சாதி வேறுபாடு மற்றும் விவாகரத்து தடையாக இருந்தபோதிலும், இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு சாலை விபத்தில் கல்யாண் உயிரிழந்தார்.
கல்யாணின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட பூஜா, ஜீவனாம்சம் கேட்டு ஜான்சிக்குச் சென்று அவர்களுடன் வகுக்கத் தொடங்கினார். அங்கு கல்யாணின் தந்தை, மூத்த சகோதரர் மற்றும் கணவர் என்று அனைவருடனும் முறையற்ற மற்றும் அதிர்ச்சிகரமான உறவுமுறைகளில் சிக்கிக் கொண்டார். இறுதியில் எல்லை மீறிய இந்த விவகாரத்தால் ஒரு திடுக்கிடும் கொலை வழக்கில் பூஜா ஜாதவ் சிக்க நேரிட்டது.
