கார் கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி… உள்ளே பார்த்ததும் உறைந்து போன குடும்பத்தினர்… டாக்டருக்கு நேர்ந்த கொடூரம்…!

By SATHISH R on ஆனி 30, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் காரில் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜுன்ஜுனு மாவட்டம் உதய்ப்பூர்வாதி பகுதியைச் சேர்ந்த 37 வயதான மருத்துவர் சந்தீப் குமார், தனது குடும்பத்தினருடன் அதர்ஷ் நகரில் வசித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் தனது மருத்துவமனைப் பணிகளை முடித்துவிட்டு அவர் காரில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

வீட்டின் வாசலுக்கு வந்த பின்னரும் மருத்துவர் சந்தீப் குமார் காரை விட்டு கீழே இறங்காமல் நீண்ட நேரமாக காருக்குள்ளேயே இருந்துள்ளார். வீட்டின் வெளியே கார் வெகுநேரமாக நிறுத்தப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது காரின் உள்ளே சந்தீப் குமார் அசைவற்று சடலமாகக் கிடப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரது குடும்பத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மருத்துவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர் சந்தீப் குமாரின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஏதேனும் சதித்திட்டம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்ற பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.