டெல்லியின் புகழ்பெற்ற ஜமா மஸ்ஜித் பகுதியில் உள்ள நெரிசலான சந்தையில், பெண் ஒருவரிடம் திருட முயன்ற நபரை இளைஞர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூட்டத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணின் பையிலிருந்து திருட முயன்றபோது, அங்கிருந்த நபர் அதைத் தனது செல்போனில் படம்பிடித்துக் கொண்டே அந்த நபரைத் தடுத்து நிறுத்தினார்.
மேலும் “நான் முழுவதையும் வீடியோ எடுத்துள்ளேன்” என்று அவர் உரத்த குரலில் எச்சரித்ததைக் கேட்டு, சுற்றியிருந்த மக்கள் அங்கு திரண்டனர். இந்தத் துணிச்சலான செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் அந்த இளைஞரின் விழிப்புணர்வையும் தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர்.
🚨 DELHI: Girl tries stealing woman’s purse at Jama Masjid. Man recording video grabs her instantly!
Stay alert in crowds & guard your belongings. Safety is YOUR responsibility.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 18, 2026
“>
இந்நிலையில் பொதுவாகப் பொது இடங்களில் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் நடக்கும்போது பலரும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலையில், இவர் ஆதாரத்துடன் திருடனைப் பிடித்தது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில், பண்டிகைக் காலங்களில் சந்தை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது பொதுமக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
