50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள்… வாலிபருடன் சேர்ந்து பெண் செய்த விபரீத வேலை… போலீஸ் அதிரடி… பகீர் பின்னணி…!!!

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற பெண் மற்றும் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாலாஜாபேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பெண் மற்றும் இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், காவல் நிலையம் அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 908 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த சுபாஷினி மற்றும் தேவதானம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் வேலூர் பகுதியிலிருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து இவர்கள் விற்பனை செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, சுபாஷினியின் மகனும், சுந்தரின் சகோதரரும் ஏற்கனவே போதை மாத்திரை வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rajeshwari

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

16 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

27 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

40 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

40 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

46 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

56 minutes ago