ரூ. 5,500 சட்டைக்காக இப்படியா? த்ரிஷா பகிர்ந்த போட்டோவில் முதல்வர் விஜய் அணிந்திருந்த சட்டையின் பின்னணி…!

By Visaka on ஆனி 25, 2026

Spread the love

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து, தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக அரியணையில் அமர்ந்துள்ள சி.ஜோசப் விஜய், சமீபத்தில் ஜூன் 22 அன்று தனது 52வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், சட்டமன்றம் முதல் சமூக வலைத்தளங்கள் வரை இவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. இருப்பினும், ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தது நடிகை த்ரிஷாவின் வாழ்த்துப் பதிவிற்காகத்தான். கடந்த காலங்களைப் போலவே, இந்த முறையும் த்ரிஷா பகிர்ந்த பிறந்தநாள் வாழ்த்துப் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

த்ரிஷா பகிர்ந்த அந்தப் புகைப்படத்தில் முதல்வர் விஜய் அணிந்திருந்த சட்டை தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது. அது ‘Mango’ எனும் பிரபல வெளிநாட்டு பிராண்டைச் சேர்ந்த சட்டை என்றும், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.5,500 என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எளிமையான தோற்றத்தில் இருந்தாலும், அந்த சட்டையின் பிராண்டும் அதன் விலையும் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

   

அதே வேளையில், இந்த புகைப்படம் உண்மையானது தானா என்ற சந்தேகமும் ஒருபுறம் எழுப்பப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் இந்த சட்டையை இதற்கு முன்பும் பலமுறை பொது நிகழ்ச்சிகளில் அணிந்திருந்ததால், த்ரிஷா பதிவிட்டது ஒருவேளை AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படமாக இருக்குமோ என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். இது AI புகைப்படமாகவே இருந்தாலும், நிஜமாக இல்லையே என்று தங்களுக்கு மிகுந்த ஏமாற்றமும் அப்செட்டும் அளிப்பதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.