தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் TCS, வணிக உலகத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ‘எங்கும் AI எதிலும் AI’ என்ற நிலை உருவாகியுள்ள சூழலில், பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்த உதவும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கையை TCS எடுத்துள்ளது.
இதற்காக, உலகப் புகழ்பெற்ற ‘Claude’ எனும் AI தொழில்நுட்பத்தை உருவாக்கிய முன்னணி நிறுவனமான Anthropic உடன் TCS கைகோர்த்துள்ளது. நிறுவன அளவில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டைப் பெருமளவில் விரிவுபடுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, இவ்விரு நிறுவனங்களும் இணைந்து ஒரு ‘உலகளாவிய முதன்மை கூட்டாண்மையை’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
இந்த பிரம்மாண்டமான AI கூட்டாண்மை மூலம், பல்வேறு வணிக நிறுவனங்கள் தங்களது அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் சேவைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மிக எளிதாகவும், திறம்படவும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. TCS நிறுவனத்தின் இந்த மிகப்பெரிய தொழில்னுட்பத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
