“கை நிறைய காசு.. குவியல் குவியலாக தங்கம்”.. நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் சொத்து பட்டியல் லீக்… வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்…!!!

By Rajeshwari on சித்திரை 14, 2026

Spread the love

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான பிம்பத்துடன் ஆட்சிக்கு வந்த ஷா, பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளேயே வெளிப்படைத்தன்மையுடன் இந்த விவரங்களை வெளியிட்டாலும், அமைச்சர்களிடம் உள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இது குறிப்பாக பிரதமர் பாலேந்திர ஷாவிடம் 1.4 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 190 சவரன் தங்கம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் மற்றும் சொத்துக்களின் ஆதாரங்களைச் சரியாக வெளிப்படுத்தவில்லை எனக் கூறி மாணவர் அமைப்புகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றன.

   

மேலும் பிரதமரைத் தவிர நிதி அமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே மற்றும் உள்துறை அமைச்சர் சூதன் குருங் ஆகியோரின் சொத்து மதிப்புகளும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. வாக்லேவிடம் சுமார் 1.9 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும், 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இதனால் நேபாள சட்டப்படி அமைச்சர்கள் 60 நாட்களுக்குள் சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றாலும், அவற்றை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும், சாதாரண மனிதர்களின் பிரதிநிதிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்ட அமைச்சர்களிடம் இவ்வளவு பெரிய செல்வம் குவிந்திருப்பது, மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் விசாரணைக் கோரிக்கையையும் எழுப்பியுள்ளது.