தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்தவர் டி ராஜேந்தர். ஒரு தலை ராகம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை அனைத்தும் எஎழுதி இசை அமைத்தவரும் இவரே. இதனை தொடர்ந்து இவர் இயக்கிய பல திரைப்படங்களுக்கு அவரை இசையமைக்க தொடங்கினார். அதுமட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என படத்தின் அனைத்து முக்கிய பங்குகளையும் அவரே வகித்து வந்தார்.

இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் அண்ணன் தங்கை பாசம் கொண்ட படமாகவே இருக்கும். தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி, தாய் தங்கை பாசம் போன்ற திரைப்படங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். மைதிலி என்னை காதலி, சொன்னால் தான் காதலா, மோனிஷா என் மோனாலிசா போன்ற பல காதல் திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். டி ராஜேந்தர் என்றாலே பொதுவாக இவருடைய ரைமிங் வசனங்கள் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும்.

அடுத்ததாக அவருடைய தாடிதான். இந்த தாடிக்கு பின்னால் இருக்கும் சோக கதை என்ன என்று குறித்து பார்க்கலாம் .டி ராஜேந்தர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவராம். இவருடைய வீட்டில் மின்சார வசதி கூட கிடையாதாம். ஆனாலும் நன்றாக படித்து பிஏ படிப்பில் முதல் முறையாக தேர்ச்சி பெற்று தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இவர் இளம் வயதில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் வீட்டில் இருக்கும் சிம்னி விளக்கில் தான் சவரம் செய்வாராம் .இதனால் அடிக்கடி பிளேடு முகத்தில் கீறி விட்டு ரத்தக்காயம் ஏற்படுமாம். இந்த காரணத்தினால் தான் அவர் தாடி வைக்க தொடங்கி விட்டாராம். டி ராஜேந்தரின் அடையாளமாக மாறிப்போன இந்த தாடிக்கு இப்படி ஒரு சோக கதையா என்று பலரும் கூறி வருகிறார்கள்.
