12 ஆண்டுகளுக்கு பிறகு குரு தரும் ராஜயோகம்…!! 3 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது… உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

By Devi Ramu on மார்கழி 27, 2025

Spread the love

ஜோதிட சாஸ்திரத்தில் சுப கிரகமாக கருதப்படும் குரு பகவான், தற்போது மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார். வரும் 2026-ஆம் ஆண்டில், சனி பகவானுக்கு சொந்தமான பூசம் நட்சத்திரத்திற்கு குரு பெயர்ச்சி அடைய உள்ளார்.

சனியின் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைவது அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பாக கடகம், கன்னி மற்றும் தனுசு ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கப்போகிறது.

   

கடக ராசியினருக்கு இக்காலகட்டத்தில் தொழிலில் எதிர்பாராத லாபமும், புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் தேடி வரும். கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் மனக்கவலைகள் நீங்கி, குழந்தை பாக்கியம் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

   

தனுசு ராசியினரைப் பொறுத்தவரை, வருமானம் அதிகரிக்கப் புதிய வழிகள் பிறப்பதோடு, வேலையில்லாதவர்களுக்குத் தகுதிக்கேற்ற உயர் பதவிகள் கிடைக்கும். இந்த நட்சத்திர மாற்றமானது இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.