பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், 2026 ஜனவரி 9 அன்று பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுல்தான்விண்ட் சாலையில் நகைக்கடை நடத்தி வரும் முக்தியார் சிங் என்பவர், வாடிக்கையாளர் ஒருவருக்கு நகைகளை வழங்க மோட்டார் சைக்கிளில் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
In Amritsar today, a jewellery store was looted in full public view… a crime carried out in a filmy style, without fear or hesitation.
This is the harsh reality of Jungle Raj in Punjab under @AAPPunjab. Criminals are ruling the streets and law and order has collapsed totally.… pic.twitter.com/fNsnsOpcia
— Arvind Khanna (@arvindkhannaoff) January 9, 2026
அமிர்தசரஸின் ‘நியூ பிளவர்’ பள்ளி அருகே கருப்பு நிற காரில் வந்த 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல், திட்டமிட்டு முக்தியார் சிங்கின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அவர் கீழே விழுந்ததும், அந்த கும்பல் வாள்கள் மற்றும் கத்திகளுடன் அவரைத் துரத்திச் சென்று சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அவரிடமிருந்த சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 425 கிராம் தங்கத்தை அந்தக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. உள்ளூர் ரவுடிகளுக்குப் ‘பாதுகாப்புப் பணம்’ (Extortion money) தர மறுத்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி நகரின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.
