விஜய்யா..? உதயநிதியா..? – செய்தியாளர் கேட்ட வம்பு கேள்விக்கு அமைச்சர் மகள் கொடுத்த ‘மாஸ்’ பதில்…!!

By Swetha on ஆனி 17, 2026

Spread the love

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் மூலம் அவர் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்குகிறார். இப்படத்தில் சனந்த் மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோருடன் இணைந்து இமயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘பிரேமம்’ பட புகழ் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ள இத்திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இமயா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர் ஒருவர், “அரசியல் பின்னணியில் இருந்து வந்த உங்களுக்கு, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் நடிகருமான உதயநிதி மற்றும் அரசியலுக்கு வந்துள்ள மாஸ் ஹீரோ விஜய் ஆகிய இருவரில் யாரைப் பிடிக்கும், யாருடைய படங்களை விரும்பிப் பார்ப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சற்றும் பதறாமல் புன்னகையுடன் பதிலளித்த இமயா, “நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை” என்று ஒரே வரியில் சாதுரியமாகப் பதிலளித்து அரசியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

   

தொடர்ந்து தனது சினிமா பிரவேசம் குறித்துப் பேசிய இமயா, ஆரம்பத்தில் தான் சினிமாவிற்குள் நுழைவதில் தனது குடும்பத்தினருக்குச் சுத்தமாக விருப்பமில்லை என்றும், ‘சினிமாவுக்குப் போயிடவே போயிடாதே’ என்றுதான் கூறினார்கள் என்றும் தெரிவித்தார். இருப்பினும், தனக்குள் இருந்த நடிப்பு ஆர்வத்தால் பல வருடங்களாகத் தொடர்ந்து போராடி, தனது விடாமுயற்சியைக் கண்டு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். தடைகளைத் தாண்டி திரையுலகில் கால் பதிக்கும் தங்கம் தென்னரசுவின் மகள் இமயாவுக்கு தற்போது பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.