BIGN EWS: இன்று இரவு முதல் நாளை காலை வரை பதிவுத்துறை இணையதளம் செயல்படாது… பத்திரம் பதிவு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு…!!

By Soundarya on தை 21, 2026

Spread the love

தமிழகப் பதிவுத்துறையின் இணையதளம் பராமரிப்புப் பணிகள் மற்றும் ‘ஸ்டார் 3.0’ (STAR 3.0) திட்ட மேம்பாட்டிற்காக இன்று இரவு 7 மணி முதல் நாளை (ஜனவரி 22) காலை 11 மணி வரை தற்காலிகமாகச் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டாலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுப் பணிகள் எந்தவிதத் தடையுமின்றி வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாளை பத்திரம் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், இன்று இரவு 7 மணிக்குள் டோக்கன் பெறுதல் மற்றும் ஆன்லைன் வாயிலாகக் கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இணையதள மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்த பின், நாளை காலை 11 மணி முதல் ஆன்லைன் சேவைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும். கூடுதல் விவரங்களுக்குப் பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.