உங்களுக்கே ஓவரா இல்லையா…? இது தேவையா…? ஓடும் இரயிலில் உயிரைப் பணையம் வைக்கும் ரீல்ஸ் மோகம்… வீடியோவை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on ஆடி 24, 2026

Spread the love

ஓடும் இரயிலின் வாசற்படியில் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுக்கும் பைத்தியக்காரத்தனம் இணையத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் சில ‘லைக்ஸ்’ மற்றும் ‘வியூஸ்’களுக்காகத் தங்கள் உயிரைப் பணையம் வைக்கும் இத்தகையச் செயல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஒரு சிறிய கவனக்குறைவோ அல்லது கால் தடுமாற்றமோ ஏற்பட்டால், ஒட்டுமொத்த வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிடும் என்பதை இளைஞர்கள் உணர மறுக்கிறார்கள்.

இது வெறும் வீடியோ எடுக்கும் முயற்சி அல்ல; தற்கொலைக்குச் சமமான ஆபத்தானச் செயலாகும். மேலும், இரயில்வே விதிகளின்படி ஓடும் இரயிலில் சாகசங்கள் செய்வது சட்டப்படி கடுமையான குற்றமாகும். உங்களை நம்பியிருக்கும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய உயிரைப் பறிக்கும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.