தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளதுடன், அக் கட்சியின் அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமான ‘விசில்’ சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6-லிருந்து 7-ஆக உயர்ந்துள்ள நிலையில், தவெகவின் இமாலய வளர்ச்சி மாநில அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
