விமானம் ஓட்டுபவர்களை “பைலட்” என்று ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

By Soundarya on ஆனி 14, 2025

Spread the love

பொதுவாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்களை டிரைவர் என்றுதான் நாம்  அழைக்கிறோம். அதே நேரம் விமானம் மற்றும் ரயிலை ஓட்டுபவர்களை மட்டும் ஏன் பைலட் என்று அழைக்கிறோம் தெரியுமா?  அதாவது விமானத்தை ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே இயக்க முடியுமா? வாகனத்தின் வேகம் எவ்வளவு செல்ல வேண்டும்? எந்த இடத்தில் பிரேக் போட வேண்டும்? எந்த இடத்தில் கீரை மாற்ற வேண்டும்? என்று அனைத்து முடிவுகளையும் டிரைவர் எடுப்பார். ஆனால்  விமானத்தை இயக்குவது வேறு, ரயிலை இயக்குவது வேறு. அதை தனிநபர் மட்டும் இயக்க முடியாதது. தனி நபர் இயக்கும் விமானம் இருந்தாலும் அவர் இதை இயக்குவதற்கு தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் உதவி வேண்டும்.

வேறு ஒருவருடைய வழிகாட்டுதலின்படிதான் இதை இயக்க முடியும். ரயில்வேயில் அப்படித்தான் டிராக்டை மாற்ற டிராக்மான் தேவை. சிக்னல் உள்ளிட்ட பல விஷயங்களை கட்டுப்பாட்டு அறையில் முடிவுகளை கொண்டுதான் ரயில் ஓட்டுபவர்கள் பின்பற்ற வேண்டும். விமானத்திலும் கட்டுப்பாட்டுத் தளத்தின் உத்தரவுகளை இவர்கள் பின்பற்ற வேண்டும். பைலட் என்பதற்கு அர்த்தம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவர் என்பது.  அதே நேரத்தில் கப்பலை பொறுத்தவரை கப்பலை இயக்குபவரை கேப்டன் என்று கூறுகிறார்கள். ஆனால் அவரை கேப்டன் என்று அழைக்க காரணம் கார் ,பைக்குகளில் சாதனங்களை இயக்குபவர் டிரைவர்.

   

விமானத்தின் சாதனங்களை பைலட்  இயக்குவார். ஆனால் கப்பலில் சாதனங்களை கேப்டன் இயக்குவது கிடையாது. கப்பலில் ஏகப்பட்ட சாதனங்கள் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வகையில் இயங்கும்.  இங்கு கேப்டன் என்பவர் கப்பல் பயணிக்கும் திசை, வேகம் உள்ளிட்ட கப்பலின் எந்தெந்த விஷயங்களை யார் எப்பொழுது இயக்க வேண்டும் என்ற விஷயத்தை கவனிக்கும் நபராக மட்டும் தான் இருப்பார்.