ஷாருக்கானால் அவமானப்படுத்தபட்டாரா சிவகார்த்திகேயன்.. அயலான் படத்துக்காக SK பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீனா போச்சே..

By Sumathi on ஜனவரி 31, 2024

Spread the love

ஆறு ஆண்டு போராட்டத்துக்கு பின் வெளியான படம் அயலான். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்துக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் அயலான் படத்துக்கு ரசிகர்கள் போதிய ஆதரவு தரவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் அயலான் படத்தை தெலுங்கு வெர்சனில் ரிலீஸ் செய்ய சிவகார்த்திகேயன், அங்கு சென்று பிரமோ நிகழ்ச்சிகளை நடத்தினார்.

   

தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை அடைய வேண்டும் ஆசை, ஆரம்பத்தில் இருந்தே சிவகார்த்திகேயனுக்கு இருந்து வருகிறது. அதனால் அயலான் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். கடந்த ஜனவரி 26ம் தேதி, ஆந்திராவில் அயலான் படத்தை வெளியிட சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருந்த நிலையில்,

   

அதற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வடிவில் ஆப்பு வந்தது. அயலான் படத்துக்கு டிஏ ஒர்க் செய்த வகையில் 30 லட்சம் ரூபாய் வரை ஷாருக்கானின் ரெட்சில்லிஸ் நிறுவனத்துக்கு தர வேண்டும். ஆனால் அயலான் பட தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் தரவில்லை.

 

அப்போதே ஷாருக்கான் ரெட் சில்லிஸ் நிறுவனத்தார், அந்த பணத்தை தராவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றனர். பாலிவுட் ஒளிப்பதிவாளரான நீரவ்ஷா தலையிட்டு, இப்போது பிரச்னை செய்யாதீர்கள். தெலுங்கு வெர்சனில் வெளியிடும் போது பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியதால் படம் தமிழில் ரிலீஸ் ஆனது.

இப்போது, தெலுங்கு வெர்சனில் அயலான் ரிலீஸ் ஆகும் சமயத்தில், அந்த 30 லட்சம் ரூபாயை தராமல், படத்தை வெளியிடக் கூடாது என ஷாருக்கானின் தொழில்நுட்ப பிரிவு நிறுவனம் தகராறு செய்கிறது. அதனால் படம் ரிலீஸ் ஆவது தடைபட்டுள்ளது. இதனால் ஏகப்பட்ட டென்சனில் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். மருத்துவமனையில் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் இருப்பதால் இந்த தொகையை தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.