டிடிவி தினகரன் கொடுத்த ஆஃபர்…. நோ சொன்ன ஓபிஎஸ்.. பின்னணியில் நடந்த ரகசிய டீல்… கடைசி நிமிட ட்விஸ்ட்….!

By Nanthini on மாசி 2, 2026

Spread the love

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் மட்டும் இணைந்ததும், ஓ. பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. உண்மையில், ஓபிஎஸ்-ஸை கூட்டணியில் இணைக்க தினகரன் கடைசி நிமிடம் வரை தீவிர முயற்சி எடுத்ததாகக் கூறப்படுகிறது. முதலில் ஓபிஎஸ்-ஸைத் தனிக்கட்சி தொடங்கி அதன்பின் கூட்டணியில் இணையுமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு ஓபிஎஸ் தயக்கம் காட்டவே, ஒருகட்டத்தில் “அமமுக சின்னத்திலேயே போட்டியிடுங்கள்” என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருக்கிறார். ஓபிஎஸ்-ஸின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தினகரன் இறங்கி வந்தாலும், ஓபிஎஸ் தரப்பில் இதற்கு உடன்பாடு ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தை முறிந்து போனதற்கு முக்கியக் காரணம், ஓபிஎஸ் காட்டிய பிடிவாதம் தான் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். “எடப்பாடி பழனிசாமியுடன்  பேச்சுவார்த்தை நடத்துங்கள், எங்களை அதிமுகவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கச் சொல்லுங்கள்” என ஓபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஈபிஎஸ் தரப்பு இவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில், மீண்டும் மீண்டும் அதையே ஓபிஎஸ் பிடித்துக் கொண்டிருந்ததால், வேறு வழியின்றி தினகரன் அவரைத் தவிர்த்துவிட்டு தனது முடிவை எடுத்திருக்கிறார். இதனால், அதிமுகவை மீட்போம் என்று கூறி வந்த இருவரும் தற்போது வெவ்வேறு திசையில் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.