பொதுவாக போர் போன்ற பதற்றமான காலங்களில் முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும். ஆனால், தற்போதைய அமெரிக்க-ஈரான் மோதல் சூழலில் தங்கம் விலை உயராமல் இருப்பதற்கு, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. டாலர் மதிப்பு உயரும்போது, மற்ற நாட்டு நாணயங்களைக் கொண்டு தங்கம் வாங்குவது செலவு மிகுந்ததாக மாறுவதால் அதன் தேவை குறைந்து விலை கட்டுக்குள் இருக்கிறது.
மற்றொரு முக்கிய காரணம், முதலீட்டாளர்களின் லாப நோக்கம் (Profit Booking) ஆகும். கடந்த 2025-ம் ஆண்டு முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து புதிய உச்சங்களைத் தொட்டது. தற்போது போர்ச் சூழலால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்த தங்கத்தை விற்று லாபத்தை ஈட்டத் தொடங்கியுள்ளனர். இந்த விற்பனை அழுத்தம் காரணமாக சந்தையில் தங்கம் விலை அதிகரிக்காமல் சரிவைச் சந்தித்து வருகிறது.
மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்த்தி வைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீது முதலீடு செய்வதை விட, மற்ற நிதிச் சார்ந்த முதலீடுகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தச் சர்வதேச பொருளாதாரக் காரணிகளால் தான் போர்ச் சூழலிலும் தங்கம் விலை தற்போதைக்கு அமைதி காப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…