Categories: சினிமா

அரண்மனை 4 ரிலீஸ் தள்ளிப்போனதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?  பழம் கைக்கு கிடைச்சும் வாய்க்கு கிடைக்கலையே?

Spread the love

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாரர் திரைப்படம் “அரண்மனை”. இத்திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு “அரண்மனை 2” திரைப்படத்தை இயக்கினார் சுந்தர் சி.

அதனை தொடர்ந்து “அரண்மனை 3” திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து “அரண்மனை 4” திரைப்படம் தற்போது உருவாகி உள்ளது. இத்திரைப்படம் முதலில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. ஆனால் தற்போது இத்திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதியும் வெளியாக வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டு மே மாதம் 3 ஆம் தேதிக்கு இத்திரைப்படம் தள்ளிப்போயுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு மே 3 ஆம் தேதிக்கு தள்ளிப்போனதற்கான காரணத்தை குறித்து பிரபல தயாரிப்பாளரான தனஞ்சயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது சுந்தர் சி, “அரண்மனை 4” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கியுள்ளாராம். ஒரே நாளில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இத்திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தாராம். அந்த வகையில் தமிழில் இத்திரைப்படத்திற்கு சென்சார் முடிந்துவிட்டதாம். ஆனால் தெலுங்கு என்று வரும்போது, ஆந்திராவில் உள்ள சென்சார் போர்டு அதிகாரி டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுவிட்டாராம். புதிய சென்சார் போர்டு அதிகாரி வருகிற திங்கட்கிழமைதான் பதவி ஏற்கவுள்ளாராம்.

ஆதலால் இத்திரைப்படத்தை மொத்தமாக தள்ளிப்போடுவதே மேல் என்று நினைத்த சுந்தர் சி, இத்திரைப்படத்தை மே  3 ஆம் தேதி ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.

Arun

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

22 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

23 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

36 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago