Categories: சினிமா

ரீரிலிஸிலும் சொல்லியடித்த கில்லி! லைஃப் டைம் செட்டில்மண்ட்டை அள்ளி சாதனை படைத்த தளபதி! இவ்வளவு கலெக்சனா?

Spread the love

சமீப காலமாக பல திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அத்திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் 20 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய விஜய்யின் “கில்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் போன்ற பலரின் நடிப்பில் வெளிவந்த  “கில்லி” திரைப்படம் தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமோக வெற்றிபெற்றது. 90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய இத்திரைப்படத்தை இத்தனை ஆண்டுகளில் தொலைக்காட்சிகளில் பல முறை பார்த்திருந்தாலும், நேற்று ரீரிலீஸ் செய்யப்பட்டபோது ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.

தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேற்று ரீரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் பிரான்ஸ், UK போன்ற நாடுகளிலும் பல திரையரங்குகளில் “கில்லி” திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது..

தமிழக திரையரங்குகளில் திரையில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்கள் மிக உற்சாகத்தோடு கண்டுகழித்த வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன. அதே போல் “அப்படி போடு”, “அர்ஜுனரு வில்லு”, “கில்லி கில்லி” போன்ற பாடல்களுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் நடனமாடி கொண்டாடி தீர்த்த வீடியோக்களும் இணையத்தில் நிரம்பி வழிகின்றன. இவ்வாறு 20 வருடங்கள் கழித்தும் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமாக “கில்லி” சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் “கில்லி” ரீரிலீஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து அது குவித்திருக்கும் வசூல் சாதனையை குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது நேற்று “கில்லி” திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாம். மேலும் ஒரே நாளில் ரூ. 3ல் இருந்து 4 கோடி வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தனஞ்சயன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Arun

Recent Posts

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

5 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

14 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

21 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

59 minutes ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

1 மணத்தியாலம் ago