புது டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான ஐபிஎல் 2026 போட்டிக்கு முன்னதாக, ஆர்சிபி வீரர்களான டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் டெல்லி வீதிகளில் ரசிகர்களுடன் இணைந்து ‘கலி கிரிக்கெட்’ விளையாடி மகிழ்ந்தனர். குறுகலான சந்துகளில் எவ்வித தயக்கமுமின்றி அவர்கள் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் தங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் மாறாமல் தெருவில் விளையாடுவதைப் பார்த்த ரசிகர்கள், அவர்களின் எளிமையைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக டிம் டேவிட் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வருகிறார். குறிப்பாக 5-வது வரிசையில் களமிறங்கும் அவர், 7 போட்டிகளில் 183 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றி வருகிறார். 203.52 என்ற அசாத்தியமான ஸ்டிரைக் ரேட் மற்றும் 91.50 என்ற சராசரியுடன் விளையாடி வரும் அவர், ஆர்சிபி அணியின் தூணாக மாறியுள்ளார். மற்றொரு வீரரான ரொமாரியோ ஷெப்பர்ட் பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பந்துவீச்சுத் திறமையை நிரூபித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் தொடரில் ஆர்சிபி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விளையாடிய 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அந்த அணி நீடிக்கிறது. இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 27) நடைபெறவுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றியைத் தொடர்ந்து, பிளே ஆஃப் வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்த விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி முனைப்புடன் உள்ளது.
Tim David playing gully cricket with fans in Vasant Kunj, Delhi — smashes it for a huge six!
Enjoying the game freely without any security.
Moments like these show why foreign players love coming to India. The passion, the people, and the love for cricket here are simply… pic.twitter.com/nAQYKzPn1S
— Sonu (@Cricket_live247) April 26, 2026
