என்னையே ஏமாத்துறியா..? கள்ளக்காதலிக்கு பல ஆண்களோடு தொடர்பு… லாரியில் ஏற்றிச்சென்ற கள்ளக்காதலன்… பின் நடந்த கொடூரம்…!!

By Soundarya on ஐப்பசி 24, 2025

Spread the love

இப்போதெல்லாம் தினந்தோறும் கள்ளகாதலால் மனைவி கொலை, கணவன் கொலை என சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதை செய்திகளில் நாம் பார்த்து வருகிறோம். அந்தவகையில் தருமபுரி மாவட்டத்தில், பல ஆண்களுடன் உடலுறவில் இருந்த கள்ளக்காதலியை அவரது கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தவர்    வள்ளி?(38).

இவர் லாரி ஓட்டுநர் புஷ்பராஜ் என்பவருடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். மேலும் பல ஆண்களுடன் உறவில் இருந்துள்ளார். இது புஷ்பராஜுக்கு தெரியவந்ததால் குஜராத்தில் இருந்து வந்த லாரி ஓட்டுநர் புஷ்பராஜ், வள்ளியை அழைத்துக்கொண்டு தனது லாரியில் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், புஷ்பராஜ் மற்றும் அவரது உறவினர் மணிவேல் ஆகியோர் சேர்ந்து வள்ளியை கொலை செய்துள்ளனர்.