Actor Ajith Kumar

நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படத்தை தயாரிக்கப் போவது இந்த நிறுவனம்தான் – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

By Elango on மாசி 4, 2026

Spread the love

நடிகர் அஜீத்குமார் தனது சம்பளம் ரூ. 186 கோடி என்று கூறியதால் கடந்த ஓராண்டுக்கு மேலாக அவரது அடுத்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் தயாரிப்பாளரும் முன்வரவில்லை. அதனால் ஏகே 64 படம் ஷூட்டிங் முடிவாகாமல் கால தாமதம் நீடித்தது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த பென் மீடியா நிறுவனம் ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வந்ததாக ஒரு தகவல் வெளியானது. இதில் அஜீத்குமார் சம்பளம் ரூ. 100 கோடியாக குறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது பென் மீடியா ஏகே 64 படத்தை தயாரிக்கவில்லை. வேறு ஒரு நிறுவனம் தயாரிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஏகே எண்டர்டெயின்மென்ட் என்று தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஏகே 64 படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் அனில் சுங்கரா. இவர் ஏற்கனவே தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடித்த போலா சங்கர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் என்று சொல்லப்படுகிறது.