“41 பேரை கொன்று குவித்தவன் விஜய்” அவருக்கு பின்னால்… – நடிகர் விஜய் குறித்து புனித சவேரியார் கல்லூரி முதல்வர் சர்ச்சை பேச்சு..!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுப் பேசிய கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ், இன்றைய இளைஞர்களின் சினிமா மோகம் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதில், இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் தங்களை “விஜய் ரசிகன்” என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “41 பேரை கொன்று குவித்த ஒருவர் பின்னால் இளைஞர்கள் செல்வது ஏன்? சினிமா நடிகர்களின் பின்னால் ஏன் நம் குழந்தைகள் போய்க்கொண்டிருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்பது ஒரு சில நாட்களில் முடிந்துவிடக்கூடியது அல்ல; அது காலங்காலமாகத் தொடர வேண்டிய ஒன்று என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யை இலக்கு வைத்து கல்லூரி முதல்வர் இத்தகைய கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது, சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.